64th National Film Awards (NFA) 2017 Winners

64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கபட்டது.விருதுகள் முழுப் பட்டியல்...

சிறந்த பொழுதுபோக்குப் படம்: சதானம் பவதி (தெலுங்கு)

சிறந்த படம்: நீரஜா (இந்தி)

சிறந்த சமூகப் படம்: பிங்க் (இந்தி)

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மாபஸ்கர் (வென்டிலேட்டர் - மராத்தி)

சிறந்த நடிகர்: அக்ஷய் குமார் (ருஸ்டம் - இந்தி)

சிறந்த நடிகை: சுரபி லட்சுமி (மின்னாமினுங்கு - மலையாளம்)

சிறந்த பாடகர்: சுந்தர அய்யர் (ஜோக்கர் - தமிழ்)

சிறந்த பாடகி: இமான் சக்கரபர்த்தி (ப்ரக்தான் - வங்காளம்)

சிறந்த குழந்தைகள் படம்: தனக் - இந்தி (நாகேஷ் குன்குனூர்)

சிறந்த துணை நடிகை: ஜரீனா வசீம் (தங்கல்- இந்தி)

சிறந்த இசையமைப்பாளர்: பாபு பத்மநாபா (அல்லாமா - கன்னடம்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) : ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே ப்ரதிகாரம் - மலையாளம்)

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணாஜி படேல் (தஷக்ரியா - இந்தி)

சிறந்த சண்டை இயக்குநர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன் - மலையாளம்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிவாய் - இந்தி

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: வென்டிலேட்டர் (மராத்தி)

சிறந்த தமிழ் படம்: ஜோக்கர்

சிறந்த மலையாளப் படம்: மகேஷிண்டே ப்ரதிகாரம் (மலையாளம்)

சிறந்த கன்னடப் படம்: ரிசர்வேஷன்

சிறந்த மராத்திப் படம்: கசாவ்

சிறந்த இந்திப் படம்: நீரஜா

சிறந்த கொங்கணி படம்: கே ஸேரா ஸேரா

சிறந்த துளு படம்: மடிபூர்

சிறந்த வங்களாப் படம்: பிசர்ஜன்

சிறந்த தெலுங்குப் படம்: பெல்லி சூப்புலு

சிறந்த குஜராத்தி படம்: ராங் சைட் ராஜு

சிறந்த குறும்படம்: ஆபா

நடுவர் குழு சிறப்பு விருது:

கட்வி ஹவா - இந்தி

முக்தி பவன் - இந்தி

மஜிரதி கேகி - அசாமி

நீரஜா - சோனம் கபூர் (இந்தி)

மோகன் லால் - புலிமுருகன், ஜனதா கராஜ், முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதிஷ் ப்ரவீண் (குஞ்சு தெய்வம்), சாய் (நூர் இஸ்லாம்), மனோகரா (ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த ஒலி வடிவமைப்பாளர்: ஜெய தேவன் (காடு பூக்குன்ன நேரம் - மலையாளம்)

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: சச்சின் (மராத்தி)

Source: Cinebilla News

Thala Ajith's Vivegam audio releasing date

அஜித்தின் ‘விவேகம்’ இசை வெளிவரும் தேதி இதோ...

அஜித் நடிப்பில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘விவேகம்’. இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சத்யஜோதி பிலிம்ஸ். சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது. இன்னமும் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பல திரையரங்குகளில் முன் வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். 

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இப்படத்தின் டீசரை தல அஜித் பிறந்த தினமான ‘மே 1’ ஆம் தேதியிலும் பாடல்கள் அனைத்தையும் ஜூன் 1 ஆம் தேதியும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்...

வில்லனுக்கே வில்லன்டா.... ”மங்காத்தா”டா....!!

அஜித்திற்கும், அஜித் ரசிகர்களுக்கும் இன்றைய தினம் ஒரு மறக்க முடியாத நாளாக நிச்சயம் இருக்கும். அஜித் என்ற ஒரு நடிகனை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த நாள். ஐந்து வருடத்திற்கு முன்பு இதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க  வெளியானது ‘மங்காத்தா’.

 மங்காத்தா தான் ’தல’ அஜித்தின் 50 வது படமாகும். பெரிய பெரிய ஜாம்பவான்களின் 50வது, 100வது படங்கள் அவர்களது காலை வாரி விட்டிருக்கின்றன. அதில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என அனைவரும் சிக்கியிருக்கிறார்கள். விஜயகாந்தை தவிர. விஜயகாந்தின் 100 வது படமாக வெளிவந்தது ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் வாழ்க்கையில் இது ஒரு மைல்ஸ்டோன் படமாக அமைந்தது.
அந்த வகையில் அஜித் நடிக்க, வெங்கட் பிரபு இயக்க, யுவனின் இசையில் வெளிவந்தது இந்த மங்காத்தா. அதற்கு முன்புவரை சூப்பர் ஸ்டார்களின் படங்கள் மட்டுமே 300-400 திரையரங்குகளில் வெளியாகும். முதல் முறையாக அஜித்தின் ‘மங்காத்தா’ மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனை நிகழ்த்தியது.

மிகவும் தைரியமாக இந்த நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்று அதில் வெற்றியும் கண்டார். இன்றும் ரசிகர்களின் உரையாடலில் சாதரண வார்த்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள்.

Week End வசூலில் மங்காத்தா தான் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியது. 4 முதல் 5 கோடி வரை வசூலை அள்ளி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனான ஒரு கதாபாத்திரம் என்றாலும், ஸ்டைல், லுக், இசை, சால்ட் அண்ட் பெப்பர் என அனைத்தும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்து விட்டது.

வெங்கட் பிரபு அஜித்தின் மிகப் பெரிய ரசிகர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ரசிகனாக இருந்து செதுக்கி எடுத்தார். இன்றுடன் மங்காத்தா வெளிவந்து 5 வருடங்கள் ஆகியுள்ளதால் தல ரசிகர்கள் மிக உற்சாகமாக அதை கொண்டாடி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் விருப்பப்பட்டால், தல ஓகே சொன்னால் நிச்சயமாக ‘மங்காத்தா-2’ இயக்க நான் தயாராக உள்ளேன் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். ‘தல’ தலையசைப்பாரா..?? 


Source: Cinebilla Kollywood News

நயனுக்கு ‘நோ’ சொன்ன அஜித்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் நயன்தாராவின் நண்பரும்  இயக்குனருமான விக்னேஷ் சிவன் அஜித்திற்காக ஒரு கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையில் அஜித்தை நடிக்க வைக்க பல வழிகளில் ஆட்களை அனுப்பி வைத்துப் பார்த்தார் நயன். ஆனால், அஜித்தின் காதினை கூட அந்த தகவல் எட்டவில்லை.

கடைசியாக நயன்தாராவே களத்தில் இறங்கினார். அஜித்திடம் நேராக சென்று பேசியுள்ளார். கடைசியாக யார் இயக்குனர் என்று அஜித் கேட்க விக்னேஷ் சிவன் என்று கூறியிருக்கிறார். 

’என்னை அறிமுகப்படுத்திய எஸ் ஜே சூர்யா, முருகதாஸ் ஆகியோர் கால்ஷீட் கேட்டும் நான் இன்னும் கொடுக்கவில்லை. இரண்டு படங்களை இயக்கிய இவரது இயக்கத்தில் நான் எப்படி நடிப்பேன்” என கூற அந்த இடத்தில் இருந்து ஜகா வாங்கியுள்ளார் நயன். பிறகு தான் கதை சூர்யாவிடம் சென்றிருக்கிறது. 

Source- Cinebilla Kollywood News

பைரவா ஆட்டம் ஆரம்பம்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகும் ‘தளபதி 60’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படத்தின் போஸ்டர் வெளியானது அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இன்று இந்திய அளவில் ட்விட்டர் பக்கத்தில் பைரவன் என்ற பெயரை ட்ரெண்ட் செய்துவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

அது மட்டுமல்லாமல் திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் இன்று ஸ்பெஷல் ஷோவாக ராம் திரையரங்கில் தெறி திரையிடப்பட்டது. மேலும் அந்த திரையரங்கில் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.


Source: Cinebilla Kollywood News

Super Star Rajini's Kabali Making Video

Watch Super star Rajini Kanth's Kabali making video

கபாலியின் முதல் வார பிரம்மாண்ட வசூல் கருத்துக்கணிப்பு

உலகமெங்கும் தற்போது கபாலி பீவர் பரவுகிறது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் எகிற வைக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் லுக், டீசர் என அனைத்தும் ரசிகர்களிடயே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. படத்திற்கான டிக்கெட் வெளிவந்த சில நிமிடங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.


இந்நிலையில் படத்தின் மீதான் வசூல் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 65 முதல் 70 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 160 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..